Articles

A deep Understanding in basic Islamic disciplines such as Al-Quraan, As-Sunnah, Fiqh, Aqeedha, Thareekh and Usools etc.. and to develop the skill in applying this knowledge wherever required.

வரலாற்றுத் திரிபும்- தெளிவும்


          வரலாற்றில் மாணவர்கள் தவறு செய்தால் அதை சரி செய்யலாம் ஆனால் வரலாற்று ஆசிரியர்களே வரலாற்றில் தவறு செய்தால் அதை திருத்துவது யாரால்தான் முடியும். உலகம் உருண்டை என்ற ஆறு நூறு வருடத்திற்கு சொல்வதற்கு முன்பே இந்த உலகத்திற்கு சொன்னவர் அல்-புரூனி என்ற அறிஞர் ஆவார். கோல பூமி பற்றியும் சூரிய சுழற்சி பற்றியும் பூமி சுழலும் அச்சுகளை பற்றியும் உலகிற்கு சிறந்த உண்மையைஅறிந்து சொன்னவர் இவர் எழுதிய ஆய்வு நூல்கள் மட்டும் 180 ஆகும். பூமியின் முதல் வரைபடத்தை தந்தவர் கெப்லர் என்பது உலக வரலாறு. ஆனால் இதற்கு முன்பே அல்-இந்துசு என்ற முஸ்லிம் அறிஞர் இந்த உலகத்திற்கு வரைபடத்தை தந்துவிட்டார். ஆனால் இந்நிகழ்வு வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்த உலகத்தை 29 ஆண்டுகள் வலம்வந்து மக்களைப் பற்றியும் புவியியல் கூறுகளை பற்றியும் முன்வந்து சொன்னவர் இப்னு பதூதா என்பவராவார். மேலும் உலகை கண்டறிந்தவர் கிறிஸ்டோபர்கொலம்பஸ் இல்லை என்கிறது உண்மையான உலக வரலாறு.

          கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஸ்பெயின் அரசர் பெர்டினான்ட் ,அரசி இசபெல்லா ஆகியோரின் பொருளுதவியுடன் 1492 ஆகஸ்ட் 3 அன்று தன்னுடைய பயணத்தை அட்லாண்டிக் பெருங்கடலில் தொடங்கி 1492 அக்டோபர் 12 இல் பக்கமா தீவுகளை அடைந்தார். இவர் அமெரிக்காவை அடைந்தபோது அவர் அந்த தீவை இந்தியா என்றும் அங்குள்ள பழங்குடியின மக்களை இந்தியர் என்றும் கூறினார். இப்னு பதூதா கிபி 1325 ஆம் ஆண்டில் துவங்கிய தன்னுடைய உலகப் பயணத்தை கிபி 1354 ஆம் ஆண்டில் முடித்தார் சுமார் 29 ஆண்டுகள் கொண்ட தன்னுடைய பயண அனுபவத்தை ரிக்கிலா என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார் மார்க்கோபோலோவின் பயணத்தைவிட இவரின் பயணம் நீண்டது. இதுவரை பயணங்களை பற்றி பார்த்தோம் இப்போது மருத்துவக் கண்டுபிடிப்புகளை பார்ப்போம்.

          இறைவன் எந்த நோயையும் அதற்குரிய சிகிச்சையின்றி படைத்ததில்லை என்ற இறைத்தூதரின் சொல்லை சீர்தூக்கி பார்த்து அறியப்படாத சிகிச்சை தேடி அறிவது இறைவனின் விருப்பத்தை இந்த உலகில் நிறைவேற்றுவதற்கான தங்களின் பங்களிப்பாக என கருதினார். ஆகவே மருத்துவ ஆராய்ச்சி மதம் சார்ந்த ஒரு புனிதக் கடமையாக கருதினர். கிபி 950 இப்னு சீனா மருத்துவ ஆராய்ச்சியை முறையாக வகைப்படுத்தி தொகுத்துத் தந்தவர். நோயாளிகளை குணப்படுத்த மனோ தத்துவத்தையும் கையாளவேண்டும் என்ற முதலில் கூறியவர் இவரே ஆவார். அதே காலகட்டத்தில் வாழ்ந்த அலீ பின் அப்பாஸ் இப்னு-ஜஸ்ஸார் கண் மருத்துவம் மற்றும் ஞாபக மறதி காண மருத்துவம் கண்டறிந்தார். அத்தபரி என்னும் மருத்துவர் மருத்துவத்தை பற்றி நூல்களை எழுதியுள்ளார் அவற்றில் ஒன்று 850 பக்கங்கள் 80 பாகங்கள் 360 அத்தியாயங்கள் கொண்டது கிபி 1100 இப்னு ஹிஜ்ர் என்பவர் தோல்வியாதிகள் பற்றியும் இயற்கை சிகிச்சைகள் பற்றியும் ஆய்வு நூல்களைத் தந்தவர். அர்ராக்கி என்னும் இஸ்லாமிய அறிஞர் மருத்துவ ஆய்வுகளில் முன்னோடியாக திகழ்ந்தவர். அரேபியர்களின் உடலை அறுவை சிகிச்சை செய்யும் 200 கருவிகளை கண்டறிந்தவர். அறுவைசிகிச்சையின் தந்தை என்று போற்றப்படுகின்ற பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த அல் காஸிம் இப்னு அப்பாஸ் என்பவர் தனது வாழ்நாள் முழுவதும் கல்விக்காக அர்ப்பணித்து கலைக்களஞ்சியத்தை எழுதியுள்ளார். இன்னும் உலகின் முதல் மருத்துவமனை ஈராக் நாட்டில் நிறுவப்பட்ட அதற்கு காரணமானவர்கள் இஸ்லாமியர்களே ஆவார்கள். இதைப் போன்ற எத்தனையோ எண்ணிலடங்கா இஸ்லாமியர்களின் வரலாறுகள் மறைக்க பட்டும் உள்ளன.

          நாம் ஐரோப்பிய அறிஞர்களையும் அவர்களின் கண்டுபிடிப்புகளையும் கற்கிறோம் என்றால் அதற்கு முக்கியமான காரணம் மெக்காலே என்பவராவார் . இவர் வில்லியம் பெண்டிங் ஆட்சிக்காலத்தில் ஆங்கில வழி கல்வி முறையை அறிமுகம் செய்வதற்கு ஜார்ஜ் மெக்காலே தலைமையில் ஒரு குழுவை நியமித்தார். பின் அந்த குழு ஐரோப்பிய இலக்கிய மற்றும் அறிவியலை இந்திய மக்களுக்கு ஆங்கில வழியில் கற்பிக்க வேண்டும் என்று ஜார்ஜ் மெக்காலே அரசிடம் கடினமாக வற்புறுத்தினார். இதைப்போன்றே சில ஆண்டுகளுக்கு முன் வாஜ்பாய் பாரத பிரதமராக இருந்தபோது வரலாற்றை மாற்றி அமைத்தார். பின்வந்த மன்மோகன் சிங் அவர்களின் ஆட்சிக்காலத்தில் மறைக்கப்பட்ட மற்றும் மாற்றி எழுதப்பட்ட வரலாற்றை திரும்பி கொண்டுவர செயல்பட்டார்.சில வரலாற்றுப் பிழைகளை மட்டுமே அவரால் திருத்த முடிந்தது. இவர்கள் செய்த மாற்றத்தினால் தான் இதைப் போன்று வரலாற்று பிற்கண்டுபிடிப்புகளைபடித்துக் கொண்டிருக்கிறோம். இத்தகைய வரலாற்றுப் பிழைகளை திருத்த வேண்டும் மற்றும் எது உண்மை எது பொய் யான வரலாறு கண்டறிவதற்கு அதிகமான வரலாற்று நிகழ்வுகளை நாம் முன்வந்து படிக்க வேண்டும். ஏனெனில் நமது அடுத்த தலைமுறை வருவதற்கு முன்பாக மீதி இருக்கும் வரலாறுகளையும் அழித்துவிட்டால் அந்த பொய்யான வரலாறுகளையே அவர்கள் படிப்பதற்கு ஒரு காரணமாக அமைந்துவிடும். இன்னும் சொல்லப்போனால் இன்றைய வரலாற்று ஆசிரியர்கள் எழுதும் முஸ்லிமல்லாதவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள் அவர்கள் நினைத்தபடி வரலாற்று நிகழ்வுகளையும் மாற்றி எழுதவும் வாய்ப்புகள் உண்டு. எனவே நான் முன்வந்து படித்து மற்றும் அரசு பணியில் அமர்ந்தார் மட்டுமே சிதைக்கப்பட்ட மறுக்கப்பட்ட ஏகப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை உண்மை செலுத்தும் வண்ணம் இந்த உலகிற்கு மேலும் அடுத்த தலைமுறைக்கு உண்மையை தரமுடியும் அப்படி செய்தால் நாமும் நமது வாழ்வுமே ஒரு வரலாறாக மாறும். இந்த உலகின் மிகப்பெரிய சொல் 'செயல்' செய்வோம் செய்து காட்டுவோம்.

செய்யத் அப்துல்லாஹ்

(இரண்டாம் ஆண்டு மாணவர்)